Shanmugan Murugavel / 2016 மார்ச் 24 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஸாம்பிக்கில் இம்மாத ஆரம்பத்தில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகங்கள், காணாமற்போன மலேஷியன் எயார்லைன்ஸ் விமானமான MH370 விமானத்தின் பாகமங்களாக இருப்பதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் இருப்பதாக, அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
கண்டெடுக்கப்பட்ட இரண்டு பாகங்களும், மலேஷிய எயார்லைன்ஸ் போயிங் 777 விமானத்தின் பாகங்களோடு ஒத்துப்போவதாக, மலேஷிய அரசாங்கத்தின் புலனாய்வுப் பிரிவொன்று கண்டுபிடித்துள்ளதாக, அவுஸ்திரேலியாவின் உட்கட்டமைப்பும் மற்றும் போக்குவரத்து அமைச்சரான டெரன் செஸ்டெர் தெரிவித்தார்.
'கண்டெடுக்கப்பட்ட பாகங்கள், MH370 விமானத்திலிருந்து வந்தமை ஓரளவு நிச்சயமென ஆய்வுகள் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளன" என அவர் தெரிவித்தார். அத்தோடு, ஆபிரிக்கக் கரையில் இது கண்டுபிடிக்கப்பட்டமை என்பது, இந்து சமுத்திரத்தின் தெற்குப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவுஸ்திரேலியாவின் செயற்பாட்டைச் சரியென இது உறுதிப்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மலேஷியாவிலிருந்து சீனா நோக்கி, 227 பயணிகள், 12 விமான ஊழியர்களுடன் புறப்பட்ட இவ்விமானமானது, 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி, விமானக் கட்டுப்பாட்டுப் பிரிவுடனான தொடர்புகளை இழந்திருந்தது. தொடர்ச்சியான தேடுதல்களுக்கு மத்தியிலும், இதுவரை இவ்விமானம் தொடர்பான எந்தவொரு தகவல்களையும் பெற்றுக் கொள்ள முடியாது போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
19 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
19 minute ago
2 hours ago