Shanmugan Murugavel / 2015 நவம்பர் 17 , மு.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
கறுப்பின மனிதரொருவரை பொலிஸார் சுட்டதையடுத்து மினியாப்போப்பஸில் ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆயுதம் தரிக்காது, கைவிலங்கிடப்பட்டு இருந்தபோதே மேற்படி சுடப்பட்டதாக, இந்தச் சம்பவத்தை கண்ணுற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தை, மேற்படி மாநில முகவரகம் ஒன்று விசாரணை செய்து வரும் நிலையில், இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மினியாப்போப்பஸ் மேயர் பெட்சி ஹொட்ஜஸ், மேற்படி சம்பவத்தில், மத்திய சிவில் உரிமைகள் விசாரணையைக் கோரியுள்ளார்.
எனினும் கறுப்பு உயிர்கள் பெறுமதியானவை” என்ற அமைப்பின் ஆர்ப்பாடக்காரர்கள் நகர் முழுவதும் பேரணியை நடாத்தியிருந்தனர். கடந்த வருடம், மிசூரியில் உள்ள பெர்குசனில் கறுப்பின இளைஞர், பொலிஸாரால் சுடப்பட்டதையடுத்து, ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிராக பொலிஸார் அதீத படைப்பலத்தை பாவிக்கின்றனர் என்று நாடாளாவிய ரீதியில் இடம்பெற்ற ஆர்பாட்டங்களிலேயே மேற்படி குழுவினர் கவனத்தைப் பெற்றிருந்தனர்.
சந்தேகத்துக்கிடமான தாக்குதல் ஒன்று தொடர்பில் பொலிஸார், சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டபோது, 24 வயதான ஜமர் கிளார்க் எனப்படும் பொலிஸாரால் துப்பாக்கிச்சூட்டுக்கு இலாக்கான இவர், தாக்குதலுக்குள்ளான நபருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அதிகாரிகள் உதவியளித்ததுக் கொண்டிருந்தபோது இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் பிழையான தகவல் பரப்பப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர், கைவிலங்கிடப்பட்டிருக்கவில்லை என சிலர் தெரிவித்ததாக கூறியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரி இன்னும் அடையாளங் காணப்படவில்லையெனினும் இரண்டு அதிகாரிகள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளனர்.
24 minute ago
31 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
2 hours ago
05 Nov 2025