2025 ஜூலை 03, வியாழக்கிழமை

காஞ்சி ஆச்சார்யா விடுதலைக்கெதிராக தமிழக அரசாங்கம் மேன்முறையீடு

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 19 , மு.ப. 09:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கணக்காய்வாளர் இராதாகிருஷ்ணன் கொலைசெய்யப்பட்ட வழக்கோடு தொடர்புட்டார்கள் என்ற குற்றச்சாட்டிலிருந்து, காஞ்சி ஆச்சார்யா ஜெயேந்திரா சரஸ்வதி உள்ளிட்ட ஒன்பது பேரை விடுவித்தமைக்கெதிராக, தமிழக அரசாங்கம் மேன்முறையீடு செய்துள்ளது.

தசாப்தகாலமாக நீடித்த இந்த வழக்கிலிருந்து, கடந்த ஏப்ரல் மாதத்தில், சென்னையின் அமர்வு நீதிமன்றமொன்று, இவர்களை விடுவித்திருந்தது. இந்நிலையிலேயே, இவ்வாறு விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக, மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசாங்கத்தின் சார்பில் மேன்முறையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவித்தல், காஞ்சி ஆச்சார்யா ஜெயேந்திரா சரஸ்வதிக்கும் ஏனையோருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு மாறாகவும், ஆதாரங்களுக்கும் வாய்ப்புகளுக்கும் எதிராகவும், இவர்கள் ஒன்பது பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசாங்கத்தின் சார்பில் இதன்போது தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகள், இரண்டு வாரங்களின் பின்னர் இடம்பெறுமென, நீதியரசர் ஆர். சுப்பையா உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .