2021 மே 06, வியாழக்கிழமை

கூடங்குளம் மின் உற்பத்தியை மீள ஆரம்பிக்கவும்: ஜெயலலிதா

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கூடங்குளம் அணு மின்நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான பணிப்புரைகளை விடுக்குமாறு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

கூடங்குளம் அணு மின்நிலையத்தின் பிரிவு ஒன்றில் உற்பத்தியாகும் 1,000 மெகா வோட் மின்சாரத்தில் 563 மெகா வோட் மின்சாரமானது தமிழ் நாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக, நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தாண்டு டிசம்பரில் தனது வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்த கூடங்குளம் அணு மின்நிலையம், கடந்த 90 நாட்களாக, பராமரிப்புப் பணிகளுக்காக மூடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் காற்றுப் பருவகாலம் முடிவை எட்டியுள்ள நிலையில், கூடங்குளம் அணு மின் நிலையமானது மீண்டும் இயங்க ஆரம்பிப்பதென்பது அவசியமானது என, ஜெயலிதா கூட்டிக் காட்டியுள்ளார்.

அதேபோல், இந்நிலையத்தின் பிரிவு இரண்டின் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறும் ஜெயலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .