Shanmugan Murugavel / 2016 ஜூலை 21 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு படைகளுடனான பாரிய மோதல்கள் தொடருகையில், வடக்கு மாகாணமான குண்டூஸிலிலுள்ள மாவட்டமொன்றின் பெரும்பாலான பகுதிகளை, நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் இடம்பெறும் பாரிய தாக்குதல்களின் மத்தியில், மூன்று நாட்கள் மோதலுக்குப் பின்னர், குவாலா-இ-ஸல் மாவட்டத்திலுள்ள 65 சதவீதம் தொடக்கம் 70 சதவீதமான பகுதிகளை தலிபான் போராளிகள் கைப்பற்றியுள்ளதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் புதன்கிழமை (20) தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள குண்டூஸ் மாகாண ஆளுநரின் பேச்சாளர் மஹ்மௌட் டனிஷ், குறித்த மாவட்டத்தின் சில பகுதிகள், தலிபானின் கைகளில் வீழ்ந்துள்ளதாகவும், ஆனால், தமது பாதுகாப்பு படைகள், முறியடிப்புத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முழு மாவட்டமும் தமது கைகளில் வீழ்ந்துள்ளதாக அறிக்கையொன்றில் தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (18) அதிகாலையில் தலிபான்களின் தாக்குதல் ஆரம்பித்ததாக தெரிவித்துள்ள உள்ளூர் பொலிஸ் தளபதி, தலிபான் போராளிகளை பின்தள்ளுவதற்கு, தமக்கு சிறிய ஆதரவே காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தலிபான் போராளிகள் 15 பேரும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையின் உறுப்பினர் ஒருவரும், பொதுமகன் ஒருவரும் இதுவரையில் கொல்லப்பட்டதாக தெரிவித்த மாவட்ட ஆளுநர் மஹ்புபுல்லாஹ் சயீடி, தலிபான் போராளிகள் 23 பேரும், பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் ஏழு பேரும் காயமடைந்ததுள்ளதாக தெரிவித்துள்ளார்.
11 minute ago
42 minute ago
47 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
42 minute ago
47 minute ago
1 hours ago