Editorial / 2017 ஜூலை 22 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்புச் சலுவைககள் வழங்கப்பட்டதாக, கர்நாடக சிறைத்துறை முன்னாள் உதவி ஆய்வாளர் (டி.ஐ.ஜி) ரூபா, வெளியிட்ட தகவல்கள் உண்மைதான் என்று, சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக, கர்நாடகா சட்டசபையின் பொதுக் கணக்குக் குழு அறிவித்துள்ளது.
இது குறித்து, பொதுக் கணக்கு குழு தலைவர் ஆர்.அசோக் தலைமையில், நேற்று நடைபெற்றக் கூட்டத்தின் பின்னர், இது தொடர்பாக கருத்து தெரிவித்த அசோக், “பெங்களூரு சிறையில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்திசெய்வது தொடர்பாக, 2004ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டு, கணக்கு தணிக்கைக் குழு வழங்கிய அறிக்கையை ஏன் அமுல்ப்படுத்தவில்லை என்று, சிறைத்துறை அதிகாரிகளை வரவழைத்து விவரங்களை கேட்டோம்.
“கணக்கு தணிக்கைக் குழுவின் அறிக்கையில் இடம் பெற்றிருந்தத் தகவல்களும் முன்னாள் டி.ஐ.ஜி ரூபா வழங்கிய அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் ஒரே மாதிரியாக இருக்கின்றன.
“சிறையில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மையானதுதான் என்று, சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இது தொடர்பான முழு விவரங்களையும் என்னால் சொல்ல முடியாது.
“இந்த முறைகேடுகள் குறித்து, முழுமையாக விவாதித்தோம். பொதுக்கணக்குக் குழுவுக்கு உள்ள அதிகாரத்துக்குட்பட்டு சிறைத்துறை அதிகாரிகளுக்கு, சில உத்தரவுகளை பிறப்பித்து இருக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.
20 minute ago
49 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
49 minute ago
57 minute ago