S.Renuka / 2025 டிசெம்பர் 21 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வாட்ஸ்அப்' செயலியின் (WhatsApp Web) , 'டிவைஸ் லிங்கிங்' (Device Linking) எனப்படும் கணினியில் பயன்படுத்தும் ஒருவரின், 'வாட்ஸ்அப்' கணக்கின் முழு கட்டுப்பாட்டையும் இணைய குற்றவாளிகள் தங்கள் வசம் கொண்டு வர முடியும்' என இந்திய சைபர் பாதுகாப்பு முகமை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து சைபர் பாதுகாப்பு முகமை வெளியிட்ட அறிக்கையில்,
'வாட்ஸ்அப்' செயலியை கணினியில் பயன்படுத்தும் அம்சத்தில் தொழில்நுட்பம் மூலம் 'பாஸ்வேர்டு' மற்றும் 'சிம் கார்டு' இல்லாமல், ஒருவரின் 'வாட்ஸ்அப்' கணக்கை சைபர் குற்றவாளிகளால் எளிதில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
இதன் மூலம் வாட்ஸாப்புக்கு வரும் நிகழ்நேர குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை இணைய பதிப்பு வழியாக அவர்களால் எளிதில் பார்க்க முடியும்.
ஒரு புகைப்பட இணைப்பை அனுப்பி, இந்த இணைய தாக்குதலை செய்கின்றனர். நம்பகமான நபரின் எண்ணில் இருந்து இணையதள இணைப்பு ஒன்று அனுப்பப்படுகிறது. அதில், இந்த புகைப்படத்தை பார்க்கவும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.
பார்ப்பதற்கு, 'பேஸ்புக் ப்ரீவியூ' அம்சத்தில் இருக்கும். அந்த போலியான பேஸ்புக் இணைப்பை திறந்ததும் படத்தை காண மொபைல் போன் எண்ணை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும் என்ற செய்தி தோன்றும். அதில் மொபைல் போன் எண்ணை உள்ளிட்டால், அடுத்த நிமிடம் 'வாட்ஸ்அப்'பின் கட்டுப்பாடு சைபர் தாக்குதல் குற்றவாளிகள் வசம் சென்றுவிடும்.
இது, 'கோஸ்ட் பேரிங்' தாக்குதல் எனப்படுகிறது. இதன் மூலம் சைபர் குற்றவாளிகளால் பயனரின் வாட்ஸாப்பில் உள்ள அனைத்து தனிநபர் விபரங்களையும் பார்க்க முடியும்.
எனவே, தெரிந்த நபரின் எண்ணில் இருந்து சந்தேகப்படும்படியான இணைய இணைப்புகள் வந்தாலும் அதில் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து வாட்ஸாப் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Share
20 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago