2021 மே 12, புதன்கிழமை

சர்வதேச ஐ.எஸ் ஆதரவுக் குழு அழித்ததாக குவைத் தெரிவிப்பு

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 20 , மு.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

வான் பாதுகாப்பு முறைமைகளையும் நிதியையும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு அனுப்பும் சர்வதேசக் குழுவை குவைத் பாதுகாப்பு அதிகாரிகள் அழித்துள்ளதாக அந்நாட்டு உள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி சேகரிப்பில் ஈடுபட்டதையும் இராணுவத் தளபாட விநியோகத்தை மேற்கொண்டதையும் மேற்படி குழுவின் தலைவரான பெயர் வெளியிடப்படாத லெபனானியர் ஒத்துக் கொண்டுள்ளதாக குவைத்தின் உள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. குவைத்தில், ஐ.எஸ்.ஐ.எஸ் இன் ஒருங்கிணைப்பாளராக இவர் செயற்பட்டதாகவும், உக்ரேனிலிருந்து எஃப்.என்6 நகர்த்தக் கூடிய வான் பாதுகாப்பு முறைமைகளை வாங்குவதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டதாகவும், இவை, துருக்கியூடாக சிரியாவை அடைந்ததாக மேலும் கூறப்பட்டுள்ளது. எனினும் எவ்வளவு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்ற தகவலை உள் விவகார அமைச்சு தெரிவித்திருக்கவில்லை.

குழுவின் லெபனானியத் தலைவர் தவிர, மூன்று சிரியர்களும் ஒரு எகிப்தியரும் ஒரு குவைத் பிரஜையும் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு இந்தக் குழுவின் ஏனைய உறுப்பினர்களான இரண்டு சிரியர்களும் இரண்டு லெபனானிய அவுஸ்திரேலியர்களும் குவைத்துக்கு வெளியே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .