2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

சாவில் தொடரும் மர்மம்

A.P.Mathan   / 2010 ஜூலை 08 , பி.ப. 01:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் தென்பிராந்திய கடற்படைத் தளபதி றியல் அட்மிரல் எஸ்.ஸ்.ஜாம்வால் அண்மையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிக் காலமானார். கொச்சியிலுள்ள ஐ.என்.எஸ். துரோனாச்சாரியார் தென்பிராந்திய கடற்படைத்தளத்தில் வைத்தே தலையில் குண்டு பாய்ந்து அவர் மரணமாகியிருந்தார். நீர்மூழ்கிகளை தாக்கியழிப்பதில் திறமைசாலியான ஜாம்வாலின் மரணத்தில் பலத்த சந்தேகம் நிலவுகிறது.

கடற்படைத்தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த வீரரொருவரின் துப்பாக்கிச் சன்னம் தலையில் பாய்ந்தே மரணம் நிகழ்ந்ததாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் குடும்பத் தகராறு காரணமாக தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல் பரவியது. இதனை அவரது குடும்பத்தினர் உடனடியாகவே மறுத்திருந்தனர்.

இப்பொழுது மற்றுமொரு தகவல் கசிந்திருக்கிறது. ஜாம்வாலின் கையிருந்த துப்பாக்கியிலிருந்துதான் குண்டு பாய்ந்திருக்கிறதாம். கொச்சின் கடற்படைத் தளத்தின் கொமான்டர் அஜய் குமார் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில்... 'வழமையாக ஜாம்வால் இங்கு வரும்போது துப்பாக்கி சுடும் பயிற்சியில் தானும் பங்குபெறுவார். அப்படி பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அவரது துப்பாக்கி சரிவர இயங்காததால் அதனை சரிபார்க்க முயன்ற வேளையிலேயே தவறுதலாக தலையில் குண்டுபாய்ந்தது...' என குறிப்பிட்டிருந்தார்.

பலத்த அனுபவசாலியான ஜாம்வால் துப்பாக்கி திருத்துவதில் அவதானமில்லாமல் இருந்திருப்பாரா என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிடப்படுகிறது....

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--