2021 மே 08, சனிக்கிழமை

சீனரின் படுகொலை: ஐ.எஸ் மீது சீனா காட்டம்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 19 , மு.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவைச் சேர்ந்த பணயக் கைதி ஒருவரையும் நோர்வையைச் சேர்ந்த இன்னொருவரையும், தலையைத் துண்டித்துப் படுகொலை செய்துள்ளதாக, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழு தெரிவித்துள்ள நிலையில், சீன அரசாங்கம், அதற்கெதிரான கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த பன் ஜிங்குவாய், நோர்வையைச் சேர்ந்த ஒலே ஜொஹன் கிரிம்ஸ்கார்ட்ஒப்ஸ்டட் என்ற இருவருமே, கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எஸ்-இன் சஞ்சிகையான டாபிக்கிலேயே, இந்தத் தகவல் வெளியாகியிருந்ததது.

அவர் கொல்லப்பட்டமையை உறுதிப்படுத்தியதோடு, அதற்குக் கண்டனத்தை வெளியிட்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சு, 'பன் ஜிங்குவாய் கடத்தப்பட்டதிலிருந்து, அவரின் பாதுகாப்புக் குறித்து, சீன அரசாங்கமும் மக்களும், மிகவும் கவனமாக இருந்தனர்" எனத் தெரிவித்துள்ளது. அத்தோடு, அவரை மீட்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைக்கெதிராகக் கருத்து வெளியிட்ட சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங், ஜிங்குவாயின் குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்துவதாகவும், எந்தவகையான பயங்கரவாதத்துக்கும் எதிராகக் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொலைச் சம்பவத்துக்கெதிராக, நோர்வே பிரதமரும், தனது கண்டனங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X