2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் 19 பேர் பலி

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 24 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் வடக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில், 19 பேர் பலியாகியுள்ளதாக சீன அர ஊடகம் அறிவித்துள்ளது. இந்த விபத்து, புதன்கிழமை இரவு இடம்பெற்றதாக அறிவிக்கப்படுகிறது.ஷான்ஸி மாகாணத்தின் ஷூவோஸோ நகரில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துக்கான காரணம் என்னவென அறியப்படவில்லை எனத் தெரிவித்த அவ்வறிக்கை, அது, தீ விபத்தாக இருக்கலாமெனவும் இல்லாவிடில் எரிபொருள் கசிவாக இருக்கலாமெனவும், இல்லாவிடின் வெள்ளமாக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

இந்த விபத்து ஏற்படும் போது குறித்த நிலக்கரிச் சுரங்கத்தில் 129 பணியாளர்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கும் தகவல்கள், அதில் 110 பேர் தப்பிக்க முடிந்ததாக மேலும் தெரிவித்தன. இது தொடர்பான மேலதிக தகவல்களை, சீன அரச ஊடகம் வெளியிட்டிருக்கவில்லை.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X