2025 ஜூலை 09, புதன்கிழமை

நயன்தாராவின் ஆவணப்படத்தால் சிக்கலா?

Editorial   / 2025 ஜூலை 08 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்களின் சினிமா பயணம் தொடர்பான வீடியோ பதிவுகளை, ஆவணப்படமாக டார்க் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து 2024-இல் 'நெட்பிளிக்ஸ்' ஓடிடி தளத்தில் வெளியிட்டது. 

ஏற்கனவே, இந்த ஆவண படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றினால் தனுசுக்கும், நலனுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்திரமுகி படத்தின் பதிப்புரிமை பெற்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் ஆவண பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் வெளியிட்ட நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு பதிலளிக்க உத்தரவிட்டது.

முன்னதாக நடிகர் தனுஷின் 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அந்த காட்சிகளை நிறுவனத்தின் அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கும் விசாரணையில் உள்ளது.

தற்போது 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க கோரி, 'சந்திரமுகி' படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 02 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .