2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

67 பேரின் உயிரை காப்பாற்றிய நாய்

Editorial   / 2025 ஜூலை 08 , பி.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த ஜூன் 20ஆம் திகதி முதல் ஜூலை 6ஆம் திகதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இதனால் 16 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதிலும் மண்டி பகுதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. ஜூன் 30 ஆம் திகதி நள்ளிரவு மண்டி மாவட்டத்தில் உள்ள தரம்பூர் பகுதியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நிலச்சரிவிற்கு முன்பு நள்ளிரவில் அங்கிருந்த ஒரு நாய் கடுமையாக குரைத்துள்ளது. நாயின் சத்தைதை கேட்டு கண் விழித்த வீட்டின் உரிமையாளர் வீட்டு சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வருவதை பார்த்துள்ளார். உடனடியாக அவர் அந்த நள்ளிரவில் அக்கிராமத்தில் உள்ளவர்களை எழுப்பி எச்சரித்துள்ளார். இதனால் கிராமத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராமத்தில் உள்ள பல வீடுகள் தரைமட்டமாகின. நாயின் சத்தத்தால் சியாதி கிராமத்தின் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .