2021 ஜனவரி 16, சனிக்கிழமை

சீனாவுக்கு விழுந்தது அடி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 13 , மு.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

எண்ணெய் வளமிக்க தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோரிவரும் சீனாவுக்கு, நெதர்லாந்தின் த ஹேக்கிலுள்ள தீர்ப்பாயத்துக்கான நிரந்தர நீதிமன்றத்தால் பலத்த அடி வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியை உரிமை கோருவதன் மூலம், பிலிப்பைன்ஸின் இறையாண்மைக்கு எதிராக, சீனா செயற்படுவதாக, அந்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த கடற்பகுதியின் சீனாவின் உரிமை கோரல் தொடர்பாக ஐக்கிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும், சீனாவுக்குத் தொடர்ச்சியாக அழுத்தங்களை வழங்கிய வந்த நிலையில், தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பை சீனா மீறிச் செயற்படுமாயின், சர்வதேசச் சட்டத்தை மீறும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது.
வளர்ச்சியடைந்துவரும் சீனாவும் பலத்தினதும் அமெரிக்காவுடன் ஏற்பட்டுவரும் அதன் கேந்திரப் போட்டிக்கும் சவாலானதாகக் கருதப்பட்ட இந்த வழக்கு, இறுதியில் சீனாவுக்கு எதிரானதாக முடிவடைந்துள்ளது.

பிலிப்பைன்ஸின் கப்பல்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதன் மூலமும் அப்பகுதியில் மீன்பிடித்தமை மூலமும் எண்ணெய்ச் செயற்றிட்டங்களை முன்னெடுத்தமையின் மூலமும், பிலிப்பைன்ஸின் இறையாண்மை மீறப்பட்டுள்ளதாக, அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கை, பயனற்ற ஒன்று என அழைத்திருந்த சீனா, அதில் பங்குபற்றுவதிலிருந்து விலகியிருந்தது. இந்த வழக்கில் பங்குபற்றுவதை நிராகரித்த சீனாவின் நிலைப்பாட்டை நீதிபதிகள் சுட்டிக்காட்டிய போதிலும், சீனாவின் நிலையிலிருந்து விடயங்கள் நோக்கப்பட்டதாகவும், சீனாவின் கருத்துகள், இராஜதந்திரத் தொடர்பாடல்கள் ஆகியன இதில் கருத்திற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

பிலிப்பைன்ஸூக்கு சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்திய நீதிபதிகள், தென் சீனக் கடலின் 90 சதவீமானதாக உள்ள குறித்த கடற்பரப்பில் வளங்களுக்கு உரிமை கோருவதற்கு, சீனாவுக்கு எந்த சட்டரீதியான உரிமையும் கிடையாது எனத் தெரிவித்தனர்.

இந்த நீதிமன்றமானது, தனது தீர்ப்பை ஒரு நாட்டின் மீது திணிக்கும் அதிகாரமற்றது. எனவே, இந்தத் தீர்ப்பைச் சீனா மீறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், தீர்ப்பை மீறுமாக இருந்தால், சர்வதேச சட்டங்களை மீறும் ஆபத்தை, சீனா எதிர்கொள்கிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .