Shanmugan Murugavel / 2016 ஜூலை 19 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான சீனாவின் முன்மொழிவொன்றை, பிலிப்பைன்ஸ் நிராகரித்துள்ளதாக, பிலிப்பைன்ஸின் வெளிநாட்டமைச்சர் பேர்பெக்டோ யாசே தெரிவித்தார். இக்கலந்துரையாடல்களுக்கு முன்நிபந்தனைகளை சீனா முன்வைத்ததன் காரணமாக, இந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
அயல் நாடுகளான சீனாவும் பிலிப்பைன்ஸூம், தென் சீனக் கடலின் உரிமைக்கான முரண்பாடு காரணமாக, அண்மைக்காலமாகவே முரண்பட்டு வந்தன.
இந்நிலையில், தென் சீனக் கடலில் சீனாவின் உரிமை கோரல், சரியானதன்று எனவும் பிலிப்பைன்ஸின் இறையாண்மைக்கு எதிரானதும் எனவும், நெதர்லாந்தின் த ஹேக்கிலுள்ள தீர்ப்பாயத்துக்கான நிரந்தர நீதிமன்றத்தால் அண்மையில் தீர்வு வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆசிய, ஐரோப்பியத் தலைவர்களின் மாநாட்டில் சீனாவினதும் பிலிப்பைன்ஸினதும் வெளிநாட்டமைச்சர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன்போதே, இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கு, சீனா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தப் பேச்சுவார்த்தையில், தென் சீனக் கடல் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்புத் தொடர்பாகக் கலந்துரையாடப்படக் கூடாது என, சீனா கோரியுள்ளது. இதனைத் தொடர்ந்தே, அந்த முன்மொழிவை பிலிப்பைன்ஸ் நிராகரித்துள்ளது.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago