2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

சிரியாவில் போர்க் குற்றங்களுக்கு ஆதாரம் சேர்க்க ஐ.நா குழு

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றிருந்தால், அவற்றுக்கான ஆதாரங்களைத் திரட்டுவதற்காக, குழுவொன்றை நியமிப்பதற்கு, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானித்துள்ளது. இதற்கான இணக்கப்பாடு, புதன்கிழமையன்று எட்டப்பட்டது.

193 நாடுகளைக் கொண்ட இந்த அவையில், 105 நாடுகள் ஆதரவாக வாக்களிக்க, 15 நாடுகள் எதிராக வாக்களித்தன. 52 நாடுகள், வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, கியூபா, வடகொரியா, ஈரான், ரஷ்யா, தென் சூடான், சிரியா, வெனிசுவேலா, சிம்பாப்வே ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

சுமார் 6 ஆண்டுகளாக சிரியாவில் இடம்பெற்றுவரும் சிவில் யுத்தத்தில், பாரிய யுத்தக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளன எனக் குற்றச்சாட்டுகள் காணப்படும் நிலையில், அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான முதலாவது படியாக இது அமைந்துள்ளது.

மார்ச் 2011ஆம் ஆண்டு ஆரம்பித்த 3100,000க்கும் மேற்பட்டோரைக் காவுகொண்டுள்ள இந்த யுத்தத்தில் இடம்பெற்ற மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, உள்ளூர் சிவில் குழுக்கள், ஆதாரங்களைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்தன. இந்நிலையிலேயே, தற்போது ஐ.நாவின் தீர்மானமும் அமைந்துள்ளன.

இதன்படி, சிரியா தொடர்பாக ஏற்கெனவே சில அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ள ஐ.நா விசாரணை ஆணைக்குழுவுடன் இணைந்து, புதிதாக அமைக்கப்படவுள்ள குழு இயங்கவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .