2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஜப்பானின் புதிய பிரதமராக நவோடோ கான்

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானின் புதிய பிரதமராக ஜனநாயக கட்சியின் உறுப்பினரும் நிதி அமைச்சருமான நவோடோ கான் நியமிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் பிரதமரான யுக்கியோ ஹட்டோயாமா தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்தே அந்த வெற்றிடத்துக்கு கான் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அந்நாட்டு நாடாளுமன்றம் அறிவித்துள்ளது.
 
ஒக்கினாவாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை அகற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதன் காரணமாகவே முன்னாள் பிரதமரான யுக்கியோ ஹட்டோயாமா, தனது பதவியை கடந்த புதன்கிழமை இராஜினாமா செய்திருந்தார்.
 
8 மாதங்கள் மாத்திரமே பிரதமர் பதவியை வகித்த ஹட்டோயாமாவுக்கு எதிர்வரும் ஜூலை மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள தேர்தல்களில் ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்குள் அதிகளவு ஆதரவு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--