2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

ஜப்பானிய பிரதமர் யுக்கியோ ஹட்டோயாமா தனது பதவியிலிருந்து இராஜினாமா

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய பிரதமர் யுக்கியோ ஹட்டோயாமா தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
 
ஒக்கினாவாவிலுள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை அகற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியதன் காரணமாகவே அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
 
ஹட்டோயாமா 8 மாதங்கள் மாத்திரமே பிரதமர் பதவியை வகித்து வந்தார்.
 
இந்நிலையில், எதிர்வரும் ஜூலை மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள தேர்தல்களில் அவரது ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு குறைவாகக் காணப்படும் அதேவேளை, பிரதமர் ஹட்டோயாமாவிற்கு கட்சிக்குள் அதிகளவு ஆதரவு கிடைக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகிறது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--