2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஜேர்மனிய ஜனாதிபதி கோஹ்லர் திடீர் இராஜினாமா

Super User   / 2010 ஜூன் 02 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மன் நாட்டு ஜனாதிபதி ஹோர்ஸ்ட் கோஹ்லர் (வயது 67), தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார். அண்மையில் ஆப்கானிஸ்தானுக்கான இரகசிய சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்த அவர் அங்குள்ள தமது நாட்டுப் படையினரை சந்தித்துவிட்டுத் திரும்பிய கோஹ்லர், ஆப்கானிஸ்தானிலுள்ள ஜேர்மனிய இராணுவத்தினரின் நடவடிக்கை குறித்து விமர்சித்திருந்தார்.

ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுடன் நிலவும் ஸ்திரமற்ற உறவுகள் தமது வர்த்தகம், வேலைவாய்ப்பு, நாட்டின் வருவாய் உள்ளிட்டவற்றில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் அவர் எதை, யாரை குறை கூறுகிறார் என்பதை விளக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இதனையடுத்தே தனது ஜனாதிபதி பதவியினை திடீரென இராஜினாமா செய்துள்ளார்.

தனது இந்த தீர்மானம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஹோர்ஸ்ட், ஆப்கானிஸ்தான் குறித்து நான் தெரிவித்த கருத்துகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜேர்மனியில் எந்த அரசியல் கட்சியினையும் சாராத முதல் அதிபராக 2004ஆம் ஆண்டு கோஹ்லர் பதவியேற்றார். பொருளாதார நிபுணரான அவர், கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகத் தேரிவு செய்யப்பட்டார். ஜேர்மன் மக்களிடையே மிகவும் பிரபலமாக அதிபராக இவர் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .