2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

டெக்ஸாஸ் முதன்மைத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியில் வென்ற பைடன்

Editorial   / 2020 மார்ச் 04 , பி.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள ஜனாதிபத் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரைத் தெரிவுசெய்வதற்காக 14 மாநிலங்களில் நேற்று நடைபெற்ற முதன்மைத் தேர்தல்களில், டெக்ஸாஸையும், வேறு எட்டு மாநிலங்களையும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் உப ஜனாதிபதி ஜோ பைடன் வென்றுள்ளார்.

இதேவேளை, இம்மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான கலிபோர்னியாவில் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டரான பேர்ணி சாண்டர்ஸ் முன்னிலையில் காணப்படுகின்றார்.

ஐக்கிய அமெரிக்காவின் தென், மத்திய மேற்கு, நியூ இங்கிலாந்து பிராந்தியங்களில் ஜோ பைடன் வென்றிருந்தார்.

கொலராடோ, உட்டா, தனது சொந்த மாநிலமான வெர்மெளன்ட் ஆகியவற்றை பேர்ணி சாண்டர்ஸ் வென்றிருந்தார்.

அலபாமா, அர்கன்ஸஸ், மஷூட்ஸ், மினியோஸ்டா, வட கரோலினா, ஒக்லஹோமா, டெனிஸி, வேர்ஜினியா ஆகிய மாநிலங்களை ஜோ பைடன் வென்றிருந்தார்.

ஜோ பைடனுக்கு அவரது முன்னாள் போட்டியாளர்களான, ஐக்கிய அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் செளத் பென்ட் நகர முன்னாள் மேயரான பீற் புடிசிச், ஐக்கிய அமெரிக்க செனட்டரான அமி குளோபச்சர் அண்மையில் ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த முடிவுகளானவை விளம்பரத்தில் அரை பில்லியனுக்கும் அதிகமான ஐக்கிய அமெரிக்க டொலர்களை செலவளித்த நியூ யோர்க்கின் முன்னாள் மேயர் மைக்கல் புளூம்பேர்க்கை போட்டியிலிருந்து பெரும்பாலும் விலக்கியுள்ளது. அமெரிக்க சமோவான ஐக்கிய அமெரிக்க பிராந்தியத்தில் மாத்திரமே அவர் வென்றிருந்தார்.

இந்நிலையில், குறித்த முடிவுகளானவை ஐக்கிய அமெரிக்க செனட்டரான எலிஸபத் வொரனுக்கு ஏமாற்றமளித்திருந்தன. பெரும்பாலான மாநிலங்களில் பேர்ணி சாண்டர்ஸ், ஜோ பைடனிலிருந்து அதிகம் பின்தங்கியதுடன் அவரது சொந்த மாநிலமான மஷூட்ஸிலும் இவர்களுக்கு பின்னாலேயே அவர் காணப்பட்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X