2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

தென்சீனாவில் கடும் மழை;மண்சரிவில் சிக்கி 132 பொதுமக்கள் உயிரிழப்பு

Super User   / 2010 ஜூன் 21 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் சீனாவில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டிருக்கும் மண்சரிவில் சிக்கி  132 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், இந்த மண்சரிவில் சிக்கி 86 பேர் காணாமல் போயிருக்கும் அதேவேளை, சுமார் 800,000 மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியிருப்பதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 68,000 வீடுகள் சேதமடைந்திருப்பதுடன், குறித்த பகுதிகளில்  மின்சாரம் தடைப்பட்டிருப்பதாகவும்  ஊடகங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், குறித்த பகுதிகளில் குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், பலர் குடிநீர் இன்றி இருப்பதாகவும் ஊடகங்கள் குறிப்பிட்டன.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .