2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

தென்னிந்தியாவில் 'லைலா' புயல்;பொதுமக்கள் 23பேர் பலி

Super User   / 2010 மே 21 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து வீசிய 'லைலா' புயலின் தாக்கம் காரணமாக தென்னிந்தியாவில் இதுவரையில் 23 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 55 மீனவர்கள் காணாமல் போயிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த 'லைலா' புயல் காரணமாக குறித்த பகுதியிலிருந்து 50,000 பொதுமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஆந்திரப் பிரதேசத்தில் நேற்று வீசிய 'லைலா' புயல் காரணமாக இடி மின்னலுடன் கூடிய கடும் மழை பெய்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

ஆந்திராவில் கரையைக் கடந்த 'லைலா' புயல் மீ்ண்டும் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதால், மேற்குவங்கம், ஒரிசா, ஆந்திர மாநில வடபகுதி பகுதிகளில் உஷார் நிலையில் இருக்குமாறும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

1977ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் இதனைப் போன்ற புயல் வீசியதன் விளைவாக 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .