2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

தாய்லாந்தில் கலவரம் நீடிப்பு; ஊரடங்கு அமுல்ப்படுத்த முடிவு

Super User   / 2010 மே 16 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டு வருவதால், பாங்காக்கில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த அந்நாட்டு பிரதமர் அபிசித் வெஜ்ஜாஜிவா முடிவு செய்துள்ளார்.

தாய்லாந்து பிரதமரான அபிசித் வெஜ்ஜாஜிவா, முறைகேடாகவே பதவிக்கு வந்தாரெனவும், அவர் பதவி விலகி தேர்தலை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த இரண்டு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாங்காக் நகரில் கடந்த இரண்டு மாதங்களாக முன்னெடுக்கப்பட்டுவந்த போராட்டங்கள், தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளன. கலவரக்காரர்களை அடக்க இராணுவம் எவ்வளவோ முயன்றும் கலவரம் நீடிக்கவே செய்கிறது.

கடந்த மூன்று தினங்களாக தொடர்ந்து நடந்து வரும் கலவரம் காரணமாக இதுவரை 25க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இதனால் பாங்காக்கில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்ப்படுத்த அந்நாட்டு பிரதமர் அபிசித் வெஜ்ஜாஜிவா முடிவு செய்துள்ளார்.

தமது இந்த முடிவை, இன்று நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் ஆற்றிய உரையின்போது அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படப்படும் எனத்தெரிகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--