2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தாய்லாந்தில் போராட்டம் தீவிரம்;துப்பாக்கிச்சூட்டில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டத் தலைவர் பலி

Super User   / 2010 மே 17 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்லாந்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த செஞ்சட்டை ஆர்ப்பாட்டத் தலைவர்  துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 13ஆம் திகதி துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான இவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்திருந்தார். இந்த நிலையில்யே செஞ்சட்டை ஆர்ப்பாட்டத் தலைவர் உயிரிழந்துள்ளார்.

தாய்லாந்து இராணுவத்தினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் மோதலில் இதுவரையில் 36 பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கும் அதேவேளை, பலர் காயமடைந்துள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்கார்கள் கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

தாய்லாந்து அரசாங்கத்தை பதவியிலிருந்து விலகுமாறும், புதிதாக தேர்தலொன்றை நடத்துமாறும் கோரியே மேற்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

எனினும், தனது பதவியை இராஜினமாச் செய்யப் போவதில்லை என தாய்லாந்துப்  பிரதமர் அபிஸிட் விஜ்ஜீவா முன்னர் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில், தாய்லாந்தில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களைத் தவிர்த்து உடனடியாக பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் செஞ்சட்டை ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் அதிகாரிகளிடமும்,  ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாயகம் பான்கீமூன் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், தாய்லாந்து அதிகாரிகள் இதனை நிராகரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--