Editorial / 2020 மார்ச் 02 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் இட்லிப் மீதான துருக்கி ட்ரோன் தாக்குதல்களில் 19 சிரியப் படைவீரர்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகத்தின் தகவல்படி இராணுவத் தொடரணியொன்று, இராணுவத் தளமொன்றை மேற்குறித்த தாக்குதல்கள் இலக்கு வைத்துள்ளன.
இந்நிலையில், சிரியத் தாக்குதல் ஜெட்கள் இரண்டையும் துருக்கி சுட்டு வீழ்த்தியுள்ளது.
இதேவேளை, சிரிய வான்பரப்பில் துருக்கி விமானத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது என சிரிய அரசாங்கத்தின் ஆதரவாளரான ரஷ்யா எச்சரித்துள்ளது.
விமானத் தாக்குதலொன்றில் குறைந்தது 33 துருக்கிப் படைவீரர்கள் கொல்லப்பட்டதிலிருந்து இட்லிப்பில் கடந்த வாரம் பதற்றங்கள் அதிகரித்திருந்தன.
இந்நிலையில், சிரிய அரசாங்கப் படைகளுடன் துருக்கிப் படைகளும், போராளிகளும் மோதலில் ஈடுபடுகின்ற இட்லிப் மாகாணத்தில் சிரிய ஜெட்கள் இரண்டின் விமானிகளும் நேற்று பரஷூட் மூலம் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளனர்.
இதேவேளை, துருக்கி ட்ரோன்கள் மூன்றை வீழ்த்தியதாக சிரியா அறிவித்துள்ளது.
இந்நிலையில், வடமேற்கு சிரியாவிலுள்ள தமது வான்பரப்பை சிரியா மூடுவதாக சிரியா தெரிவித்துள்ளதாகவும், இதை மீறும் எந்த விமானமும் எதிரி விமானமாகக் கருதப்பட்டு கட்டாயம் வீழ்த்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளதாக சிரிய அரச செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிரிய வான் பாதுகாப்பு அமைப்புகள், டசின் கணக்கான தாங்கிகளையும் தாம் இலக்கு வைத்ததாக துருக்கி கூறியுள்ளது.
இந்நிலையில், சிரியப் படைகளின் 2,212 உறுப்பினர்கள் செயலற்றவர்களாக்கப்பட்டுள்ளதாக துருக்கி தெரிவிக்கிறது. கொல்லப்பட்டது, காயமடைந்தது அல்லது கைப்பற்றப்பட்டதற்கு செயலற்றவர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகின்றது. எவ்வாறெனினும், 100க்கும் சற்று அதிகமான சிரியப் படைகள், சிரிய ஆதரவுப் போராளிகளே நேற்று முன்தினம் முதல் கொல்லப்பட்டதாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
7 hours ago