2021 மே 15, சனிக்கிழமை

‘துரோகத்துக்கு பிராயச்சித்தம் தேடுகிறார்’

Editorial   / 2017 ஜூன் 07 , பி.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

“இந்த ஆட்சிக்கும் கட்சிக்கும், ஓர் ஊனத்தை ஏற்படுத்தி, மில்லியன்கணக்கான, இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு, மாறாத மன உளைச்சலைத் தந்து, ஒரு பச்சைத் துரோகம் இழைத்தமைக்கு, பிராயச்சித்தம் தேட வேண்டிய நிலைமைக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுள்ளார்” என்று, அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனின் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.  

முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அரசாங்கத்துக்கு, தங்களால் ஆட்சிப் பறிபோகும் நிலை ஏற்படாது என்று, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,  

“அப்படி அவர் ஒரு முயற்சி மேற்கொண்டாலும், அதில் அவர் வெற்றிகொள்ளப்போவதில்லை. அவருடைய ஆதரவில், இந்த ஆட்சி தற்போது இயங்கிக் கொண்டிருக்கவில்லை. எட்டிக்காய் காய்த்தாலும் ஒன்றுதான், காய்க்காவிட்டாலும் ஒன்றுதான். ஆனால், அவருடைய குற்ற உணர்ச்சி, அவரைக் குற்றிக் கிழிப்பது, இந்த வாக்குமூலத்தின் மூலம், தெரிகின்றது.  

“எந்தச் சுவரிலே போய் முட்டுவதென்று தெரியாமல், பேதலிக்கின்ற
ஓ. பன்னீர்செல்வத்தினுடைய வாக்குமூலத்தை, ஒரு பொருட்டாகவே நான் எடுத்துக்கொள்ளவில்லை. ஓ.பன்னீர்செல்வம் அணியிலுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், டி.டி.டி தினகரனை தலைமையாக ஏற்பதற்குத் தயாராகிவிட்டார்கள் என்ற நல்ல செய்தியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.  

தினகரனுக்கும் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் இருக்கும் பிளவு காரணமாகவே, ஓ.பிஎஸ் இந்தக் கருத்தைக் கூறியுள்ளாரா என்று வினவியபோது,  

“இல்லை. இவர், ஆட்சிக்கு ஆதரவு தராவிட்டாலும், ஆட்சிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டு விடாது. ஆகவே, இவர் விதிக்கும் நிபந்தனைகளை, எந்தக் காலத்திலும் நாம் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. இவை, யாரோ சொல்லி விதித்த நிபந்தனைகள், அதனால், அவற்றை நாம் ஏற்கப்போவதில்லை. பன்னீர்செல்வம் அணியில் இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், டி.டி.வி தினகரனை ஏற்று வரவிருக்கின்றார்கள். பன்னீர்செல்வம் செய்த பாவத்துக்கும் செய்த துரோகத்துக்கும் உரிய பலனை, அவர் விரைவில் அனுபவிப்பார்” என்று கூறியுள்ளார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .