2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

‘தைரியமான முடிவை எடுக்க வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரியத் தீபகற்பத்தில் அணுவாயுதமழிப்புத் தொடர்பில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன்னும், தைரியமான முடிவொன்றை எடுக்க வேண்டுமென, தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் கோரிக்கை விடுத்துள்ளார். இரு நாட்டுத் தலைவர்களுக்குமிடையில், மீண்டுமொரு சந்திப்பை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக, வெள்ளை மாளிகை அறிவித்த பின்னணியிலேயே, இக்கோரிக்கையை, ஜனாதிபதி மூன், நேற்று (11) விடுத்தார்.

“கொரியத் தீபகற்பத்தில் முழுமையான அணுவாயுதமழிப்பு என்பது, ஐ.அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேரம்பேசலின் போது, அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டியது” என, ஜனாதிபதி மூன் தெரிவித்தார்.

ஆனால், ஐ.அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், தொடர்ந்தும் அதிகமாக இடம்பெறும் வரை, இரு நாடுகளுக்குமிடையில் சமரசத்தை ஏற்படுத்தும் பணியில் தாம் ஈடுபடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐ.அமெரிக்க, வடகொரியத் தலைவர்களுக்கிடையில், இவ்வாண்டு ஜூனில், சிங்கப்பூரில் இடம்பெற்ற சந்திப்புக்குச் சமரசப் பணியில் ஈடுபட்டிருந்த ஜனாதிபதி மூன், வடகொரியத் தலைவரை மூன்றாவது தடவையாகச் சந்திப்பதற்காக, வடகொரியத் தலைநகர் பியோங்கியாங்குக்கு, அடுத்த வாரம் செல்லவுள்ளார். இந்நிலையிலேயே, தென்கொரிய ஜனாதிபதியின் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X