2021 மே 06, வியாழக்கிழமை

தலிபான்களுக்குப் பின்னடைவு: ஆப்கான் படைகள் வசமானது குண்டூஸ்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 01 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று நாட்களுக்கு முன் தலிபான்களால் கைப்பற்றப்பட்ட குண்டூஸ் நகரத்தை ஆப்கானிஸ்தான் அரசாங்கப் படைகள் கைப்பற்றியுள்ளதாக அங்கு இருக்கும் ஆப்கானிஸ்தான் சிறப்பு படைகளின் கட்டளைத் தளபதி கூறியுள்ளார்.

நகரத்தை முழுமையாக கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நகரத்தின் மத்திய பகுதியில் இருந்து தலிபான்கள் நகர்ந்துள்ளதாகவும், அது இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை (29) இரவு இடம்பெற்ற அமெரிக்க விமானத் தாக்குதல்களில் தலிபான்களின் நிலைகள் தாக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் வசிக்கும் பகுதிகளைக் கைப்பற்ற இராணுவம் கடினமான எதிர்ப்பை எதிர்கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் உள் விவகார அமைச்சு நகரத்தை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. எதிரிக்கு அதிக இழப்புக்களுடன் நகரம் தீவிரவாதிகளிடம் இருந்து மீளக் கைப்பற்றப்பட்டுள்ளதாக உள் விவகார அமைச்சின் பேச்சாளர் செடிக் செடிக்கி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .