2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

தேநீர்க்கடைக் காரரிடம் ரூ. 100 மில். பறிமுதல்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் வசிக்கும் தேநீர்க்கடை முதலாளி ஒருவரிடம், சுமார் 100 மில்லியன் இந்திய ரூபாய் பெறுமதியான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புதிய நாணயத் தாள்களில் 10.5 மில்லியன் ரூபாய் உட்பட சுமார் 14.5 மில்லியன் ரூபாய் பணம், 49.2 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான தங்க நகைகள், 13.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஏனைய நகைகள், 12.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெள்ளிப் பொருட்கள், 14.9 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான பங்குப் பத்திரங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .