2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

தென்கொரிய அதிகாரிகளின் திறன்பேசிகளை ஹக் செய்த வடகொரியா

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 08 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பலரின் திறன்பேசிகளை, வடகொரியா ஹக் செய்ததாகவும் அதனூடாகத் தகவல்களைத் திருடியுள்ளதாகவும், தென்கொரிய தேசிய புலனாய்வுச் சேவை உறுதிப்படுத்தியுள்ளது. வடகொரியாவின் 4ஆவது அணுகுண்டுச் சோதனைக்குப் பின்னரே, இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதத்தின் இறுதிப் பகுதியிலும் மார்ச் மாதத்தின் ஆரம்பப் பகுதியிலும், திறன்பேசிகளை ஹக் செய்த வடகொரியாவைச் சேர்ந்த நபர்கள், அத்திறன்பேசிகளிலிருந்து தொலைபேசி இலக்கங்களையும் குறுஞ்செய்திகளையும் திருடியுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இவற்றுக்கு மேலதிகமாக, தென்கொரிய அதிகாரிகளுக்குக் குறுஞ்செய்திகளை அனுப்பி, அவற்றில் அனுப்பப்படும் சுட்டிகளை (link) அழுத்துவதன் மூலமாக, மேலும் அதிகமான விடயங்களைத் திருட, வடகொரியா முயன்றதாக அறிவிக்கப்படுகிறது. மேலும், தென்கொரியாவின் வங்கித் துறைக் கட்டமைப்பைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியிலும் வடகொரியா ஈடுபட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--