2021 மே 06, வியாழக்கிழமை

தீய அரசாங்கங்களால் ஐ.நா இலக்குகளை அடைய முடியாது: ஒபாமா

Shanmugan Murugavel   / 2015 செப்டெம்பர் 28 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊழலை எதிர்கொள்வதுடன் பெண்கள், சமபாலுறவாளர்கள், ஏனைய சிறுபான்மைக் குழுக்களுக்கெதிரான பாகுபாட்டை ஒழிக்காமல், வறுமைக்கெதிரான ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளை அடைய முடியாது என, அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளை அறிமுகம் செய்யும் நிகழ்விலேயே பரக் ஒபாமா இவ்வாறு தெரிவித்தார்.

தீய ஆட்சியினால் அபிவிருத்தியானது ஆபத்துக்குள்ளாக்கப்படுகிறது. ஊழல் காரணமாக பல பில்லியன் கணக்கான பணம், பாடசாலைகளுக்கும் வைத்தியசாலைகளுக்கும் இல்லாது போவதாகத் தெரிவித்த அவர், வெளிப்படைத் தன்மையையும் வெளிப்படையான அரசாங்கத்தையும் சட்டத்தின் ஆட்சியையும் அரசாங்கங்கள் பின்பற்ற வேண்டுமெனத் தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டுவரை, பூகோளரீதியிலான வறுமையையும் ஏனைய பிரச்சினைகளையும் ஒழிப்பதற்காக 17 இலக்குகளைக் கொண்ட திட்டத்தை, ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளும் ஏற்றுச் செயற்படுவதற்கு ஏற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .