2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

துருக்கியில் மூன்று பொலிஸார் பலி

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 11 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

துருக்கியின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள நகரான சான்லியுர்பா நகரிலுள்ள பஸ் நிலையமொன்றில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூன்று பொலிஸார் கொல்லப்பட்டதோடு, மேலும் மூவர் காயமடைந்தனர் என, அரச ஊடகம் இன்று தெரிவித்தது.

குறித்த நகரத்தின் ஆளுநரை மேற்கோள்காட்டிய அவ்வூடகம், இது பயங்கரவாதம் சம்பந்தப்பட்டதன்று என்று தெரிவித்தது. இந்தத் தாக்குதல் பற்றி அவ்வூடகம் இன்று அறிக்கையிட்ட போதிலும், இது எப்போது இடம்பெற்றது என்பதைத் தெரிவித்திருக்கவில்லை.

தாக்குதலை மேற்கொண்டவர், 17 வயதான உளவியல் பிரச்சினைகளைக் கொண்ட இளைஞர் எனத் தெரிவித்த அந்நகர ஆளுநர், தனது குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருந்த அவர், தந்தையின் துப்பாக்கியை எடுத்துச் சுட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பஸ் நிலையத்தில் நின்றோரிடம் அடையாள அட்டைகளைக் காண்பிக்குமாறு கோரிய பொலிஸார் மீது தாக்குதலை நடத்திய அவ்விளைஞர், பின்னர் இன்னொரு தொகுதிப் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதன்போதே, இந்த உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X