Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 12:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
துருக்கியின் வான்பரப்புக்குள் ரஷ்ய விமானப்படை விமானங்கள் உள்நுழைந்ததை கடுமையாக சாடியுள்ள நேட்டோ, அதீத ஆபத்து என்று தெரிவித்துள்ளதோடு, சிரிய எதிரணி மற்றும் பொதுமக்கள் மீதான அனைத்துத் தாக்குதலையும் நிறுத்துமாறு ரஷ்யாவை நேட்டோ கோரியுள்ளது.
துருக்கி வான்பரப்பினுள் ஏற்றுக் கொள்ள முடியாத அத்து மீறல் என நேட்டோ செயலாளர் நாயகம் ஜென்ஸ் ஸ்டோல்ட்டின்பர்க்கினால் வர்ணிக்கப்பட்டதுக்கு பதிலளிக்கும் முகமாக 28 அங்கத்துவ நாடுகளினதும் தூதுவர்கள் ஒன்றுகூடிய அவசர கூட்டம் ஒன்றிலியே மேற்படி கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
சனிக்கிழமை, ரஷ்ய விமானப்படையின் எஸ்யு-30 ரக விமானம் துருக்கி வான்பரப்புக்குள் சென்றிருந்த நிலையில், துருக்கியின் எஃப்-16 ரக விமானங்களால் இடைமறிக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை எஸ்யு-24 ரக விமானம் துருக்கி வான் பரப்புக்குள் நுழைந்துள்ளது. இதனையடுத்து, துருக்கிக்கான ரஷ்ய தூதுவரை அழைத்த துருக்கி, விளக்கம் கோரியுள்ளது.
மோசமான காலநிலை காரணமாகவே சனிக்கிழமை துருக்கி வான்பரப்புக்குள் உள்நுழைய வேண்டி ஏற்பட்டதாகவும், எனினும் அது சில செக்கன்களுக்கே நீடித்தாக தெரிவித்துள்ளதோடு, ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற அத்துமீறல் தொடர்பில் உத்தியோகபூர்வமாக எதனையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், துருக்கியின் ஆயுதப் படைகளுக்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், பறக்கும் பறவையாக இருந்தாலும், அது இடை மறிக்கப்படும் என தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலொன்றில் அந்நாட்டின் பிரதமர் அகமட் டவுடொக்லு தெரிவித்துள்ளார்.
22 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
36 minute ago
1 hours ago