2020 நவம்பர் 25, புதன்கிழமை

திறைசேரி அமைச்சராக டேர்ண்புல்லை நியமிக்குமாறு ஆலோசனையளித்திருந்தேன்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 12 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் திறைசேரி அமைச்சராக இருந்த ஜோ ஹொக்கிக்கு பதிலாக தற்போதைய  பிரதமர் மல்கொம் டேர்ண்புல்லை நியமிக்குமாறு, அவரால் பதவி கவிழ்க்கப்பட முன்னர், முன்னாள் பிரதமர் டொனி அபோட்டுக்கு ஆலோசனை வழங்கியதை  மற்றொரு முன்னாள் பிரதமரான லிபரல் கட்சியின் ஜோன் ஹோவார்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

தவிர, சர்ச்சைக்குரிய அபோட்டின் தலைமைப் பணியாளர் பெற்றா கிரட்லினை பதவியிலிருந்து அகற்றுமாறும் அபோட்டுக்கு ஆலோசனை வழங்கியதையும் ஹோவார்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.

பெற்றா கிரட்லினை பதவியிலிருந்து அகற்றுமாறு தெரிவித்த ஹோவார்ட், அபோட்டுக்கு தான் இரண்டு தனிப்பட்ட விடயங்களில் ஆலோசனை வழங்கியதாகவும், அதில் மேற்கூறியது ஒன்று என அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாரம் வெளியான ஊடகவியலாளர் நிக்கி சவாவின் புத்தகத்தின் படி, அபோட்டின் வீழ்ச்சிக்கு கிரட்லினே காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் அபோட் பதவி கவிழ்க்கப்பட்டு டேர்ண்புல்லால் பிரதியீடு செய்யப்பட்டிருந்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .