2021 ஜனவரி 20, புதன்கிழமை

‘நெதன்யாகு பதவி விலகத் தேவையில்லை’

Editorial   / 2019 நவம்பர் 26 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோசடிக் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகத் தேவையில்லை என இஸ்ரேலின் சட்டமா அதிபர் அவிஷை மன்டெல்பிளிட் நேற்று தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், தனது அரசியல் தப்பிப் பிழைத்தலுக்காக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போராடுகையில் இது அவருக்கான அவகாசமொன்றாகக் கருதப்படுகின்றது.

பதவியிலிருக்கும் இஸ்ரேலிய பிரதமருக்கெதிரான முதலாவது குற்றவியல் குற்றச்சாட்டாக, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கெதிராக ஊழல், மோசடி, நம்பிக்கையை மீறிய குற்றஞ்சாட்டுக்கள் கடந்த வியாழக்கிழமை பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வேண்டுமென மத்திய இடதுசாரிக் கொள்கைகளுடைய எதிர்க்கட்சி, இஸ்ரேலில் தரமான அரசாங்கத்துக்கான நகர்விலிருந்து அழைப்புகள் வந்திருந்ததுடன், அவரின் லிக்குட் கட்சிக்குள்ளும் தலைமைத்துவத் சவால்களைத் தோற்றுவித்திருந்தது.

எவ்வாறெனினும், தற்போதைய நிலையில் இஸ்ரேலிய சட்டத்தின்படி பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலகத் தேவையில்லை. பிழை எதுவும் செய்யவில்லை என மறுத்த பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பதவியில் தொடரப் போவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, பிரதமர் பதவிக்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தற்காலிகமாக பொருத்தமற்றவரா எனப் பிரகடனப்படுத்த வேண்டுமான எனக் கலந்துரையாடுவதற்கு தனது சிரேஷ்ட பணியாளர்களை அவிஷை மன்டெல்பிளிட் கூட்டியிருந்தார் என நீதியமைச்சு கூறியிருந்தது.

அந்தவகையில், இவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்டால் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இராஜினாமா செய்ய வேண்டும் அல்லது விடுமுறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்நிலையிலேயே, தற்காலிக அரசாங்கமொன்றுக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமை தாங்குகையில், பிரதமர் பதவிக்கு தற்காலிகமாக பொருத்தமற்றவரா என்ற சட்டமா அதிபரின் முடிவொன்றுக்கு தற்போதைய நிலையில் இடமில்லை என அறிக்கையொன்றில் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .