2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

நேபாள பள்ளத்தாக்கில் பஸ் வீழ்ந்தது: 18 பேர் இறந்தனர்

Editorial   / 2019 நவம்பர் 28 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நேபாளத்திலுள்ள நெடுஞ்சாலையொன்றிலிருந்து பஸ்ஸொன்று விலகி ஆழமான பள்ளத்தாக்கொன்றில் நேற்று  வீழ்ந்த நிலையில், உயிர் தப்பியவர்களை உயர்ந்த மலைப் பகுதியில் மீட்புப் பணியாளர்கள் தேடிவருகையில், குறைந்தது 18 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேபாளத் தலைநகர் காத்மண்டுவுக்கு மேற்காகவுள்ள மலைப்பாங்கான அர்ககஞ்சி மாவட்டத்திலிருந்து தென் நகரமான புட்வாலுக்கு பஸ் பயணிக்கும்போதே வீதியை விட்டு விலகி, 350 மீற்றர்கள் ஆழத்தில் தரையில் வீழ்ந்துள்ளது.

இந்நிலையிலேயே, இரண்டு கைக்குழந்தைகள் உள்ளடங்கலாக 17 பயணிகளினதும், பஸ் ஓட்டுநரதும் சடலங்களைத் தாங்கள் மீட்டுள்ளதாக பிரதான மாவட்ட அதிகாரி பிஜயராஜ் பெளடெல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வேறு 12 பேர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளபோதும் பஸ்ஸும் மேலும் பயணிகள் இருந்தார்களா எனத் தெரியவில்லை என பிஜயராஜ் பெளடெல் கூறியுள்ளார்.

இந்நிலையில், விபத்துக்கான காரணத்தை விசாரிப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .