2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

நளினியின் குற்றச்சாட்டு தொடர்பில் குழுவொன்று நியமனம்

Super User   / 2010 மே 13 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக தமிழக சட்ட அமைச்சர் துரை முருகன் சட்டப் பேரவையில் இன்று தெரிவித்தார்.

வேலூர் மகளிர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நளினி, அண்மையில் சிறைத்துறை அதிகாரிக்கு புகார்க் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உணவில் நஞ்சு கலக்க முயற்சி நடந்திருப்பதாகவும், சிறைத்துறை அதிகாரிகள் தமக்குக் கொடுமை இழைத்ததாகவும் அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இன்று கேள்வியெழுப்பினார். இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், நளினியின் புகார்கள் குறித்து விசாரணை நடத்துவதற்குக் குழு அமைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .