2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

நியூசிலாந்து பிரதமராகப் பதவியேற்றார் பில் இங்க்லிஷ்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியூசிலாந்தின் சமூகப் பழமைவாதக் கொள்கைகளையுடைய நிதியமைச்சரான பில் இங்க்லிஷ், நாட்டின் புதிய பிரதமராக இன்று (12) பதவியேற்றுக்கொண்டார். பிரபலமான முன்னாள் பிரதமரான ஜோன் கீ, கடந்த வாரம் அதிர்ச்சிகரமாக தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார்.

இன்று காலை இடம்பெற்ற கூட்டமொன்றின்போதான மத்திய வலதுசாரி தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் வாக்கெடுப்பின்போது ஏகமனதாக ஆதரிக்கப்பட்ட இங்க்லிஷ், நியூசிலாந்துத் தலைநகரமான வெலிங்டனிலுள்ள அரசாங்க வீட்டுக்குச் சென்று சில மணித்தியாலங்களில் உத்தியோகபூர்வமாக பதவியேற்றுக் கொண்டார். அரச சேவைகள் அமைச்சரான போலா பென்னெட், பிரதிப் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--