2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானில் 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானினின் மத்திய மற்றும் வடக்குப் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.3 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூரின் கிழக்குப் பகுதி ஆகிய இடங்களிலும் உணரப்பட்டதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டியுள்ள ஹிந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டவுடன் மக்கள் பீதியடைந்து தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விவரங்கள் பற்றிய தகவல் ஏதும்இன்னும் வெளி வரவில்லை.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X