2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

பாகிஸ்தான் இராணுவத்தினரின் தாக்குதலில் 40 தலிபான்கள் பலி

Super User   / 2010 மே 27 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானில் பழங்குடிகள் வசிக்கும் ஒரக்சாய் பகுதியில் இராணுவத்தினர் நடத்திய அதிரடி தாக்குதலில், 40 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் ஒரக்சாய் பகுதியில், தபோரி மற்றும் கில்ஜோ ஆகிய இடங்களில் பாகிஸ்தான் இராணுவத்தினர் ஹெலிகொப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியதில் 15 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.  

அத்துடன் காஷா பகுதியில் தலிபான்கள் பதுங்கியிருந்த ஐந்து இடங்களை இலக்கு வைத்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 25 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.    இந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் இராணுவ நடவடிக்கை காரணமாக சுமார் 700 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .