2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தான் இராணுவத் தளபதியின் நீடிப்பை நிறுத்திய நீதிமன்றம்

Editorial   / 2019 நவம்பர் 27 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவீட் பஜ்வாவின் பதவிக்கால நீடிப்பொன்றை, அந்நாட்டின் உச்ச நீதிமன்றமானது தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தானின் பலமிக்க இராணுவத்துடன் முரண்பாடு நோக்கி உச்ச நீதிமன்றம் நகர்கிறது.

அந்தவகையில், குறித்த நகர்வானது பிரதமர் இம்ரான் கானுக்கான அடியொன்றாகக் காணப்படுகிறது. பிரச்சினைக்குரிய காஷ்மிர் தொடர்பில் அயல் நாடான இந்தியாவுடன் தொடரும் பதற்றத்தைக் காரணங்காட்டி ஜெனரல் குவாமர் ஜாவீட் பஜ்வா பதவியில் தொடருவது தேவைப்படுவதாக இவ்வாண்டின் ஆரம்பத்தில் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்தார்.

ஜெனரல் குவாமர் ஜாவீட் பஜ்வாவுக்கு மூன்றாண்டு கால நீடிப்பொன்று இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று  வழங்கப்பட்ட மேற்குறிப்பிட்ட தற்காலிகக் கட்டளையானது தற்காலிகமானது மாத்திரமானது என்பதுடன், குறித்த வழக்கை தொடர்ந்தும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

அந்தவகையில், தனது காரணத்துக்கான விரிவான விவாதங்களை இராணுவம் முன்வைக்கும் வரையில் பதவிநீடிப்பு தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளதாக பாகிஸ்தானின் பிரதம நீதியரசர் ஆசிஃப் சயீட் கொஸா தெரிவித்துள்ளார்.

பிராந்திய பாதுகாப்பு நிலை இருக்குமானால், முழுமையாக இராணுவம் நிலையமையை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, தனிநபரல்ல என்று கூறிய ஆசிஃப் சயீட் கொஸா, இந்த விடயம் அனுமதிக்கப்படுமானால் இராணுவத்திலுள்ள ஒவ்வொரு தனிநபரும் இதன் அடிப்படையில் பதவி நீடிப்பொன்றைக் கோரலாம் எனக் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் அரசமைப்பின்படி, வழமையாக இராணுவத் தளபதி மூன்றாண்டு பதவிக்காலத்தில் இருக்கலாம். 1972ஆம் ஆண்டு இராணுவத் தளபதி பதவி அறிமுகப்படுத்தப்பட்டது முதல் மக்களாட்சி அரசாங்கமொன்றால் ஒரு ஜெனரலின் பதவிக்காலமே நீடிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .