2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

பங்களாதேஷில் படகு கவிழ்ந்ததில் 12 பொதுமக்கள் உயிரிழப்பு

Super User   / 2010 ஜூன் 08 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

பங்களாதேஷில் படகொன்று கவிழ்ந்ததில் 12 பொதுமக்கள் உயிரிழந்துள்ள அதேவேளை, பலர் காணாமல் போயுள்ளனர்.

பங்களாதேஷில் வீசிய  கடும் காற்று காரணமாகவே  மேற்படி படகு கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் வடபகுதியிலிருந்து 140 கிலோமீற்றர் தொலைவிலுள்ள  கடலிலேயே இந்த படகு விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த படகில் பாடசாலை மாணவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் பயணித்திருந்ததாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, பங்களாதேஷில் கடந்த நவம்பர் மாதம் இரு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 118 பொதுமக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .