2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

பத்திரிகை நிருபரிடம் இலஞ்சம் கோரிய பிரிட்டிஷ் மகாராணியின் மருமகள் சாரா

Super User   / 2010 மே 26 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத்தின் இரண்டாவது புதல்வர் இளவரசர் ஆன்ட்ரூவின் மனைவி  சாரா பத்திரிகை நிருபர் ஒருவரிடமிருந்து 3 கோடி ரூபா இலஞ்சம் கோரியுள்ளார்.

தன்னை இந்தியத் தொழிலதிபர் என்று  சாராவிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட குறித்த பத்திரிகை நிருபர்,  தான் பிரிட்டிஷுடன் வர்த்தக உறவு வைத்துக்கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.  இது தொடர்பில் ஆன்ட்ரூவை சந்திக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையிலேயே, குறித்த நிருபரிடமிருந்து சாரா இலஞ்சம் கோரினார்.

இதற்கு சம்மதம் தெரிவித்த குறித்த நிருபர், முதல் கட்டமாக ரூ.84 இலட்சத்தை சாராவிடம் கொடுத்தார்.  அத்துடன், இந்த சம்பவத்தை  அவர் வீடியோவாக எடுத்தபோது தான் தன்னிடம் பணம் கொடுத்தவர் நிருபர் என்று சாராவுக்கு தெரியவந்தது.

உடனே அந்தப் பணத்தை திருப்பிக் கொடுத்ததுடன், மன்னிப்பும் சாரா கேட்டுக்கொண்டார்.     Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .