Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 28 , மு.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயங்கரவாதம் மற்றும் அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ்-க்காக நிதி சேகரிப்பில் ஈடுபட்ட பதினொரு பேருக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நீதிமன்றமொன்று ஆயுள் தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு அரச ஊடகமான டபில்யு.ஏ.எம் தெரிவித்துள்ளது.
நாட்டுக்கெதிராகவும் அதன் பாதுகாப்புக்கெதிராகவும் பயங்கரவாதக் குற்றங்களை புரியும் நோக்கத்துடன் சுடுகலன்களையும் வெடிபொருட்களையும் வைத்திருந்த, மொத்தமாக நாற்பத்தொரு பிரதிவாதிகள் மீது கடந்த ஒக்டோபர் மாதம் குற்றஞ் சுமத்தப்பட்டிருந்ததாக டபில்யு.ஏ.எம் கூறியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) விடுக்கப்பட்ட அறிக்கையில், மேற்கூறப்பட்டவர்கள் எந்த நாட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. தவிர, இருவருக்கு, வழக்கில் ஆஜராகமலேயே அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெடிப்பொருட்கள் அல்லாத ஆயுதங்களை வைத்திருந்த நால்வருக்கு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தவிர, 41 பிரதிவாதிகளில் மீதமுள்ள 23 பேருக்கு, ஐந்து தொடக்கம் பதினைந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மிகுதிப் பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .