2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

பிரிட்டன் நாடாளும‌ன்ற தே‌ர்த‌லி‌ல் எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி முன்னிலையில்

Super User   / 2010 மே 07 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனில் நடைபெ‌ற்ற நாடாளும‌ன்ற தே‌ர்த‌லி‌ல் எ‌‌தி‌ர்‌க்க‌‌ட்‌சியான கன்சர்வேடிவ் கட்சி‌ 307 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உ‌ள்ளது.

தொ‌ழிலாள‌ர் க‌ட்‌சி‌க்கு‌ 255 ஆசனங்களும், லிபரல் ஜனநாயகக்கட்சி‌க்கு 59 ஆசனங்களும் ‌கிடை‌த்து‌ள்ளன.

அ‌ந்நா‌ட்டி‌ன் 649  தே‌ர்த‌‌ல் தொகு‌திகளில் நடைபெற்ற தே‌ர்த‌லி‌ல் சுமார் 4,150 வே‌ட்பா‌ள‌ர்க‌ள் போ‌ட்டி‌யி‌ட்டன‌ர். ஏற‌த்தாழ 4 கோடி 40 இல‌ட்ச‌ம் வா‌க்காள‌ர்க‌ள் த‌ங்களது வா‌க்கு‌களைச் செலு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

ஆளு‌ம் தொ‌ழிலாள‌ர் க‌ட்‌சி‌க்கு‌ம், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சியான கன்சர்வேடிவ் கட்சி‌க்கு‌ம் இடையே பல‌த்த போ‌ட்டி ‌நிலவியது.

கரு‌த்து க‌ணி‌ப்புக‌ள் க‌ன்ச‌ர்வேடி‌வ் க‌ட்‌சி‌க்கு சாதகமாக இரு‌ந்தாலு‌ம், த‌னி‌ப் பெரு‌ம்பா‌‌‌ன்மை ‌கிடை‌க்காது எ‌ன்று தெ‌‌ரியவரு‌கிறது.

இத‌ற்‌‌கிடையே கடு‌ம்போ‌ட்டி‌யி‌ல் ஆளு‌‌ம் தொ‌‌ழிலாள‌ர் க‌ட்‌சி அ‌திக‌ப்படியான இட‌ங்களைக் கை‌ப்ப‌ற்‌றி லிபரல் ஜனநாயகக் கட்சியுட‌ன் இணை‌ந்து கூ‌ட்ட‌ணி அரசு அமை‌க்க வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ம் என வா‌க்கு‌ப்ப‌திவின் பின்னரான கரு‌த்து‌ க‌‌‌ணி‌ப்புக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

கட‌ந்த ஆ‌ண்டுக்கான ‌நி‌தி ஒது‌க்‌கீ‌ட்டி‌ல் ஊழ‌ல் நடைபெ‌ற்றதாக அரசுக்கு எதிரான புகா‌ர்கள் முன்வைக்கப்பட்டன. அதனா‌ல் யா‌ர் வெ‌ற்‌றி பெ‌ற்றாலு‌ம் நா‌ட்டி‌‌ன் ‌நி‌தி‌ நிலைமையை மே‌ம்படு‌த்த வே‌ண்டு‌ம் என பெரு‌ம்பாலான ம‌க்க‌ள் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன‌ர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--