2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

பிரிட்டிஷில் கூட்டணி அரசாங்கம்?

Super User   / 2010 மே 09 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டிஷ் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் கன்சர்வேடிவ் கட்சியினரும் லிபரல் டெமாக்கிரடிக் கட்சியினரும் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர்.

கன்சர்வேடிவ் கட்சியினர் தங்களுக்கு ஒத்துழிப்பு தருவதாக தெரிவித்த விடயங்கள் குறித்து விவாதிப்பதற்காக லிபரல் டெமாக்கிரடிக் கட்சித் தலைவர் நிக் கிளெக் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளார்.

தேர்தல் சீர்திருத்தம் வேண்டும் என்ற கோரிக்கையில் தனக்கு ஈடுபாடு குறையவில்லை என்றும், ஆனால் தற்போது கன்சர்வேடிவ் கட்சியுடன் தாம் ஈடுபட்டுவரும் பேச்சுவார்த்தைகளின் விபரங்களை வெளியிட முடியாது என்றும் நிக் கிளெக் கூறியுள்லார்.

இதேவேளை, பிரிட்டிஷ் தேர்தல் முறையில் விகிதாச்சார பிரதிநிதித்துவ சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டம் செய்த ஆயிரக்கணக்கானோர் முன்பும் நிக் கிளெக்  உரையாடியுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--