2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

பிரதம நீதியரசை நீக்கிய மாலைதீவுகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Editorial   / 2019 நவம்பர் 19 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாலைதீவுகளின் பிரதம நீதியரசர் அஹ்மட் அப்துல்லா டிடி, உச்ச நீதிமன்ற நீதியரசர் அடம் மொஹமட் அப்துல்லாவை நீக்க மாலைதீவுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று  வாக்களித்துள்ளனர்.

நீதித்துறை மறுசீரமைப்பொன்றின் அங்கமொன்றான என குறித்த நகர்வை மாலைதீவுகள் அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், நீதிமன்றங்களின் சுயாதீனம் மீதான தாக்குதலொன்று என இந்நகர்வை எதிர்க்கட்சி வர்ணித்துள்ளது.

நாடாளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதித்துறை கண்காணிப்பகத்தின் பரிந்துரையின் அடிப்படையிலேயே தாங்கள் இயங்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றத்தின் சில நீதியரசர்கள் அரசமைப்பை மீறியதாகவும், நாடாளுமன்றத்தின் அதிகாரங்களைக் கைப்பற்றியதாகவும் நீதித்துறை கண்காணிப்பகம் கடந்த மாதம் கூறியிருந்தது.

இந்நிலையில், அஹ்மட் அப்துல்லா டிடி, அடம் மொஹமட் அப்துல்லா அல்லது அவர்களது அலுவலகங்களும் உடனடியாக கருத்தெதனையும் தெரிவித்திருக்கவில்லை.

இதேவேளை, குறித்த வாக்களிப்பு தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபையும் உடனடியாக கருத்து எதனையும் கூறியிருக்கவில்லை.

கடந்தாண்டு செப்டெம்பர் மாதத்தில் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சொலிஹ் ஆட்சிக்கு வந்திருந்த நிலையில், அவர் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் சிரேஷ்ட நீதிபதிகள் தொடர்பாக நீதிச் சேவை ஆணைக்குழு கண்காணிப்பகம் விசாரணையொன்றை ஆரம்பித்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .