2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

ப்ரஸல்ஸ் தாக்குதல்கள்: ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸார் மோதல்

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 28 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெல்ஜியத் தலைநகர் ப்ரஸல்ஸில் இடம்பெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து, அதில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவு நிகழ்வொன்றில், பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

அந்தத் தாக்குதல்களில் பலியானோரைக் கௌரவிக்கும் முகமாக உருவாக்கப்பட்டிருந்த தற்காலிக நிலையமொன்றில் ஒன்றுகூடிய வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் நூறு பேருடன், பெல்ஜியத்தின் கலகமடக்கும் பொலிஸார் மோதினர்.

குறித்த ஆர்ப்பாட்டம், கட்டுப்பாட்டை மீறியதையடுத்து, கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்ட பொலிஸார், அவர்களைக் கலைக்க முயன்றனர். இதன்போது, 10 பேர் கைது செய்யப்பட்டதோடு, பொலிஸாரில் இருவர் காயமடைந்தனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .