2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

'போர்க் குற்றங்களில் ஈடுபடுகிறது ரஷ்யா'

Shanmugan Murugavel   / 2016 ஜூலை 18 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவில் "போர்க் குற்றங்களில்" ஈடுபட்டுவரும் ரஷ்யாவை எதிர்த்து நிற்பதற்கு, ஐக்கிய அமெரிக்கா தவறிவருவதாக, சிரியாவின் எதிர்க்கட்சிகளின் முன்னணி பேரம்பேசல் அதிகாரியொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சியின் உயர் பேரம்பேசல் செயற்குழுவின் உறுப்பினரான பஸ்மான கொடாமணி என்பவரே, இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தரையில், ரஷ்ய நடவடிக்கைகள் குறித்த காத்திரமான எதிர்வினைகள் ஆற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ரஷ்யா, ஒன்றைச் சொல்வதாகவும் ஒன்றைச் செய்வதாகவும் குற்றஞ்சாட்டிய அவர், விமானத் தாக்குதல்களில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதோடு, சிரியாவில் சமாதானத்துக்காக என்ன செய்ய விரும்புகிறது என்பது தொடர்பாக, ரஷ்யா தொடர்ந்தும் பொய் சொல்லி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .