Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 ஜூலை 28 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்மாண்டி தேவாலயமொன்றில், பாதிரியாரொருவரை கடந்த செவ்வாய்க்கிழமை (26) கொன்றமையில் பங்குகொண்ட இரண்டாவது நபரை, 19 வயதான அப்டெல் மலிக் பெட்டிட்ஜீன் என பிரெஞ் வழக்குத் தொடருநர்கள் அடையாளங் கண்டுள்ளனர். அப்டெல் கெர்மிஷே எனப் பெயரிடப்பட்ட மற்றைய தாக்குதலாளியும் 19 வயதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர், கண்காணிப்புப் பட்டியலில் இருந்ததாகவும், தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னரும், அவரை பொலிஸ் தேடியிருந்ததாக பரிஸ் வழக்குத் தொடருநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இருவரும், ஜக்கூஸ் ஹமேல் என்ற 86 வயதான பாதிரியாரை கொன்றதுடன், பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்த நிலையில், தேவாலயத்துக்கு வெளியே வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், காணொளி ஒன்றை வெளியிட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் குழு, மேற்குறிப்பிட்ட இருவரும் தமக்கு ஆதரவு அளித்ததாக தெரிவித்திருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago